Thursday, May 23, 2024

நான் எம்மாத்திரம் | What am I


உன் நட்பு எனக்கொரு பொக்கிஷம்,

மறுக்க என்னிடம் இல்லை மனம்.

உனது பாசம் எனக்கொரு வரம்,

அதற்காக இருப்பேன் வாழ்நாள் முழுவதும் தவம்.


என் மனம் கண்டது ஈரம்,

அழிந்தது என்னுள் தைரியம்.

என்னுள் ஏதோ ஒரு புது மாற்றம்,

அறியாமல் தவிக்கிறேன் தினமும்.


உன் பெயர் கேட்டதும்,

மனம் ஆனந்தத்தால் துள்ளும்,

பூவாய் மாறும் உன்னை கண்டால், கல்லும்,

நான் எம்மாத்திரம்....


   By           

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

The Silent Struggles of A Father

Even when the world does him wrong, He doesn't cry as he is meant to be strong. Not for himself, but for his family, He will bear all bu...