Wednesday, December 25, 2024

நீ எனக்கொரு திருவிழா


உன்னை காணும்பொழுது எனுள் தீபாவளி,
மனதுக்குள் சந்தோஷ வேடியுடன் ஒளி.
நீ சிரித்தால் எனுள் புத்தாண்டு,
என் நினைவுகளை நீ வந்து பந்தாடு.

நீ ஒரு திருவிழா, நீயே என் வரம்,
என் வாழ்வில் நீயே நிகரான நலம்!
உன்னில் காணும் ஒளி, என் மனதில் தரும் உற்சாகம்,
உன்னைப் பார்ப்பதற்கே, மெல்ல ஒளிரும் என் இதயம்.

நம் இதயங்கள் இணைந்து பாடும், வாழ்வில் ஒரு ராகம்,
என் வாழ்வின் நாட்களில் உன் அன்பு ஒரு அழகு ஏகம்.
அன்பின் இசை சேர்த்து போக, இந்த வாழ்க்கை பாதை,
அதில் உன் பாசம் என் பல்லவி, அதுவே ஒரு தனி போதை.

நீ சொல்லும் வார்த்தைகள், மலர்போல் பூக்கும்,
என் இரவுகளில் வெண்ணிலவாய் மிதக்கும்.
என் இதயத்தில் நீ ஒரு அழகான இசை,
அது என்றும் நிற்காத ஓசை.


You Are My Festival

Every time I see you it’s a festival of light,
In my heart I feel all the bursting and bright.
It’s a new years occasion when you laugh,
As your thoughts play football within my mind.

You are a festival, my boon,
You are the best during my lifespan.
The lights within you creates excitement in me,
My heart slowly glows just to see you alone.

Our hearts sing together, a rhythm of life,
In the days of my life your love is one beauty.
This path of life goes along with the music of love,
In it your affection is my chorus, a unique addiction.

Your words bloom like flowers,
The moon floats in my nights.
You are a beautiful music in my heart,
A rhythm which never stops.

By
Sanji Paul Arvind

No comments:

Post a Comment

My Adoration and My Zeal (Re-written)

  In this world my ADORATION for her is extreme, BEGUILING and CHARISMATIC she is in my dream. DAUNTLESS she stands, ENCHANTING with grace, ...