Tuesday, February 18, 2025

என் ஆசைகளும் விருப்பங்களும் | My Wishes and Wants


உன் உடல் போல் உலகம் ஒன்று வேண்டும்,
என்றென்றும் அதீல் நான் வாழ வேண்டும்.
உன் இதயம் போல் ஒரு கடல் அங்கு வேண்டும்,
எண்றும் அதீல் நான் நீந்தி மிதக்க வேண்டும்.

உன் முகம் பொலிவு போல் ஒரு சூரியன் வேண்டும்,
அதன் ஒளி பகலில் என்மேல் பொலிய வேண்டும்.
உன் முக அழகு போல் வெண்ணிலா ஒன்று வேண்டும்
அதனை இரவு முழுவதும் நான் ரசிக்க வேண்டும்.

உன் சிரிப்பு மழையாக பொழிய வேண்டும்,
அதில் தினமும் நான் நனைய வேண்டும்.
உன் கண்கள் போல் நட்சத்திரங்கள் வேண்டும்,
அதன் அழகை கண்டு நான் மகிழ வேண்டும்.

உன் கூந்தல் போல் ஆகாயம் வேண்டும்,
அதன்கீழ் நான் விலையடா வேண்டும்.
உந்தன் மடிபோல் ஒரு வீடு வேண்டும்,
அமைதியாக நான் அதில் உறங்க வேண்டும்.



My Wishes and Wants

I wish a world like your body,
In which I want to live forever.
I wish an ocean like your heart,
In which I want to swim and float.

I wish a sun like the brightness of your face,
I want its light to shine upon me all day.
I wish a moon like the beauty of your face,
I want to enjoy its view all night.

I wish your laughter to pour like rain,
I want to soak in it every day.
I wish stars like your eyes,
I want to rejoice in its beauty.

I wish a sky like your hair,
Under it, I want to play .
I wish a house like your lap,
I want to sleep in it peacefully.

By
Sanji-Paul Arvind
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:

Post a Comment

If I Was, I Wish...

If I was earth, I wish you to be my sun, If I was oceans, I wish you to be my moon, If I was air, I wish you to be my oxygen, If I was fire,...