உனக்கொரு குறை, இல்லையே,
உறக்கத்துக்கு ஏங்குது உந்தன் பூ விழியே,
மலரகளால் தொட்டில் ஒன்று, கட்டியே
நான் எழுதிய பாட்டு,
என் தோழிக்கு ஒரு தாலாட்டு...
உன் வருகைக்காக கனவுலகம்
காத்திருக்கும்,
தகவல் அனுப்பியுள்ளேன், நீ வருவாய் என!
கண்ணுறங்கும் வேளையில் காற்றும்
த்திருக்கும்,
குறிப்பு அனுப்பியுள்ளேன் நீ உறங்குவாய்
என!
கையேந்தியுள்ளேன், சூரியனும் சிறிது
தாமதமாய் உதிக்கும்,
அழகி தூங்குகிறாள் நிம்மதியாக என!
உத்தரவிட்டுள்ளேன் ஈக்களும்
கொசுக்களுக்கு,
என் தேவதை ஓய்வெடுக்குறாள் என!
எந்தன் மனம் பாடும் ஆராரோ ஒரு தாயாக,
உன் பாதம் பிடித்துவிடுவேன், ஒரு
தந்தையாக.
நீ உறங்கும் வரை காத்திருப்பேன்,
கண் விழித்தபின், தோழனாய் நான் அருகில்
இருப்பேன்.
இது நான் எழுதிய பாட்டு,
என் தோழிக்கு ஒரு தாலாட்டு...
A Lullaby
By
Sanji-Paul Arvind
keyboard
No comments:
Post a Comment