போலோகம் உங்களை அடைவதில் பெருமையே.
உங்கள் பெயர் வாழ்க,
உங்களை நினைக்கும் உள்ளமும் வாழ்க.
நாம், அறியாமையால் செய்த தவறுகளை மன்னிப்பீராக,
உங்களின் கோபத்திற்கு அஞ்சலி, என் கண்ணீராக.
நீங்கள் நடக்கும் பாதையில் பூக்கள் மலரும்,
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்.
உங்களின் புன்னகையில் ஆறாத மனம் இல்லை,
தீராத வலி இல்லை.
உங்களின் கண்களின் கூர்மையால் பற்றி எரிந்தது சில நெஞ்சம்,
அது போதும் போதும் என கெஞ்சும்.
உங்களை படைத்தவன் ஒரு ஞானி,
உங்கள் ஸ்பரிசம் ஒரு சஞ்சீவினி.
உம்மையே என்றும் நாடுகிறேன்,
மனதில் வைக்க மன்றாடுகிறேன்.
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment