எந்தன் ஆன்மா உள்ளவரை,
நீ இருப்பாய் என் துடிப்பிலே .
எந்தன் துடிப்பு உள்ளவரை,
நீ இருப்பாய் என் ஸ்வாசத்திலே.
எந்தன் ஸ்வாசம் உள்ளவரை,
நீ இருப்பாய் என் நினைவிலே.
எந்தன் நினைவுள்ளவரை,
நீ இருப்பாய் என் உள்ளத்திலே.
எந்தன் உள்ளத்திலே நீ இருப்பாய்
நான் இருக்கும்வரை.
நான் இருப்பேன்
என்னுள் நீ இருக்கும்வரை.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment