Tuesday, May 28, 2024

நம் உலகம் | Our World

இருவர் வளும் உலகில்,

நீ வேண்டும் என் அருகில்,

நம் வாழ்வின் அணைத்து நொடியில்,

அன்பு நிரம்பட்டும், சுவாசத்தில்.


உன்னை மட்டும் காணவேண்டும் கனவில்,

அதுவே எனக்கு சந்தோசம் இந்த வாழ்வில்.

கலாம் கடந்து போகும் உந்தன் சிரிப்பில்,

கலந்து விட்டாய், நீ என் உயிரில்.


என்னோடு கனா காணும் காலங்களில்,

உன்னுடன் இருந்த நினைவுகளில்.

உள்ளம் தொலைகிறது, உணர்வில்,

என் என்மனம் அங்கு ஆனது  பலி.


என் காலம் முடிந்தபின் இம்மண்ணில்,

உன் உருவம் மற்றும் என்  விழிகளில்,

எனது ஆன்மா விடைபெறும் மகிழ்ச்சியில்,

அதுவே எந்தன் ஆசை கடைசியில்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

Sanji Paul's World of Poems, Volume 2

Sanji Paul's World of Poems, Volume 2: The Scars On the Broken Hearts https://www.amazon.in/dp/B0FVY3SBSY