Tuesday, May 28, 2024

என் ஆலயம் | My Temple


நீ எனக்கு ஒரு ஆலயம்,

அதில் கடவுள்போல் உனது உள்ளம்,

அதன் பாசம், எனது பூஜை,

என் கடமை, உனது சேவை.


உனது பார்வை, எனக்கு வரம்,

நீ மிச்சம் வைத்த உணவு எனக்கு பிரசாதம்

உனது சிரிப்பு, எனக்கு மகிழ்ச்சி,

இல்லையெனில் நின்றிடும் எனது மூச்சு.


உன்னை புகழ்வது, என்னதான் பிரார்த்தனை,

வேண்டாம் எனக்கு வேறு சோதனை,

தாங்கமுடிய பாரம்,

உன் முகத்தில் கோபம்.


By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...