என்னுள் நீ என்ற விதை விழுந்தது,
என் ஆன்மாவை இணைத்து வேர் பிடித்தது,
அது என் கண்ணீரினால் வளர்ந்தது,
இன்று மிகப்பெரிய மரமாய் நிற்கிறது.
ஆசை என்னும் பழம் காய்த்தது,
காதல் என்னும் பூக்களும் மலர்ந்தது,
அதை வளர்க்க மனமில்லாமல் தவிக்கிறேன்,
அதை வெட்டி எரிக்க இஷ்டமில்லாமல் துடிக்கிறேன்.
சூரியன் உதிக்கின்ற வேளையில்,
என் கண்களில் ஏதோ ஒரு பயம்,
விழித்த பின் நீ மறைந்து விடுவாய் என,
பிறகு அறிந்தேன், நீ என்னுள் என்றும் வாழ்கிறாய் என.
நான் உன்னை விட்டு வரும் வேளையில்,
என்னையும் உன்னருகில் விட்டு வந்தேன்,
உன்னை மறக்க நினைத்து, நினைத்து,
நான் என்னையும் மறந்துவிட்டேன்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment