Friday, March 20, 2026

உன் நினைவோடு நான் இருப்பேன் + Song



இப்பொழுதும், எப்பொழுதும், முப்பொழுதும்
இருக்க வேண்டும் நீ என்னுள்.
நேற்றும், இன்றும், என்றென்றும்,
நானிருப்பேன் உன் நினைவோடு.

காலையில் உதிக்கும் சூரியன் போல்,
அதில் இருக்கும் ஒளியைப் போல்.
மாலையில் தோன்றும் நிலவு போல்,
அதில் காணும் அழகைப் போல்.

நான் நிற்கும் இந்த மண்ணைப் போல்,
அதில் வாழும் உன்னைப் போல்.
வீசும் மெல்லிய காற்றைப் போல்,
அதில் நான் சுவாசிக்கும் சுவாசம் போல்,

நான் காணும் மலர்களைப் போல்,
அதில் இருக்கும் நறுமணம் போல்.
இப்பொழுதும், எப்பொழுதும், முப்பொழுதும்
இருக்க வேண்டும் நீ என்னுள்.


என்றும்
சஞ்சி-பால் அர்விந்த்


No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...