உந்தன் ஒளி நிஜமென்றேன்,
சூரியனுக்கு என்மேல் கோபம் வந்தது.
உன்னை என் நிலவென்றேன்,
அந்த நிலாவுக்கு என்மேல் கோபம் வந்தது.
உந்தன் அதிர்வு போதுமென்றேன்,
காற்றுக்கு என்மேல் கோபம் வந்தது.
உன் வாசம் நறுமணமென்றேன்,
பூக்களுக்கு என்மேல் கோபம் வந்தது.
உந்தன் மனம் ஆலமென்றேன்,
கடலுக்கு என்மேல் கோபம் வந்தது.
உந்தன் சிந்தனை பெரியதேன்றேன்,
வானத்துக்கு என்மேல் கோபம் வந்தது.
உந்தன் நடை நளினமென்றேன்,
ஓடும் நதிகளை என்மேல் கோபம் வந்தது
நீ ஒருவள்தான் அழகென்றேன்,
இந்த இயற்கைக்கு என்மேல் கோபம் வந்தது.
உன்னை உச்சத்தில் வைத்தேனென்று,
கடவுளுக்கு என்மேல் கோபம் வந்தது.
நீ என்னுடையவள் என்றேன்,
அனால் உனக்கும் என்மேல் கோபம் வந்தது.
உந்தன் கோபம் சாபம் போல மாறி,
சாபம் சுட்டெரிக்கும் தீயாய் மாறி
அந்த தீ நீயாய் மாறி,
என்னை எரித்து சாம்பலாக்கியது.
The Angers Against Me
I said your glow is true,
The sun got angry on me.
I said you are prettier,
The moon got angry on me.
I said yours is a good vibe,
The air got angry on me.
I said your fragrance is pleasant,
The flowers got angry on me.
I said your heart is a deep place,
The oceans got angry on me.
I said your thoughts are big,
The sky got angry on me.
I said your charm pleases me,
The rivers got angry on me.
I said you alone is beautiful,
Nature got angry with me.
I kept you on top of this world,
The gods got angry at me.
I said you belong to me,
And you too got angry at me.
Your anger turned into a curse,
The curse turned into a burning fire,
And that fire turned into you,
Burned me to ashes.
By
Sanji-Paul Arvind
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.
No comments:
Post a Comment