Thursday, April 23, 2026

என் சோகக் கதை



மழையில் அழுதிட ஆசைப்பட்டேன்,
என் கண்ணீரை கண்டு மழையே நின்றது.
தீயில் கருகிட நினைத்தேன்,
என் உள்ளம் எரிவதை கண்டு தீயும் அணைந்தது.

அடர்ந்த காட்டின் நிழலில் நின்றேன்,
என் தனிமையை உணர்ந்து காடே விலகியது.
வானத்தை நோக்கி வருந்தி பார்த்தேன்,
நிலா சிரித்து — “நீயும் நானும் ஒன்றே,” என்றது.

மருந்து தேடி மருத்துவரை நாடினேன்,
“இது நோயல்ல… முடிவற்ற நிலை,” என்றார்.
மண்ணாகும் வரை தொடரும் இது,
மண்ணே அதன் இறுதி மருந்து,” என்றார்.

பிரிவை தாங்க முடியாமல் மரணத்தை நாடினேன்,
உன் வலியை விட இங்கு குறைவே,” என்றது அது.
கடைசியில் கடவுளை தேடி சென்றேன்,
என்னை கண்டதும் கடவுளும் கல்லாய் நின்றார்.

By
Sanji-Paul Arvind
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...