உனது பெயர் ஒரு கீர்த்தனம்,
அதை புகழ்வது என் வாழ்க்கையின் நோக்கம்,
என்றென்றும் என் நினைவில் இருக்கும்,
அதுவே எனக்கு மிக பெரிய பாக்கியம்.
வாழ்க்கை உன் முகப்பொலிவில் நடக்கட்டும்,
உனது ஞாபங்கங்கள் என் சிந்தனையில் நிரம்பட்டும்,
மென்மேலும் உனது நாமத்தை துதிக்கட்டும்,
என் ஆன்மா என்றும் உன்னை தொடரட்டும்.
என்றென்றும் உனழகை வர்ணிக்கட்டும்,
என்மனம் உன்னையே த்யானிக்கட்டும்,
என் நாவு உன்னை போற்றி பாடட்டும்,
உனது கிருபை என்மேல் இருக்கட்டும்.
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment