Thursday, May 30, 2024

என்னுள் நீ | You In Me


என் உடலை கண்டதுண்டமாய் வெட்டி வவீசினாலும்,

ஒவ்வொரு துண்டின் துடிப்பின் ஓசையிலும் உன் பெயர் ஒலிக்கும்,

ஒவ்வொரு துளி ரத்தத்திலும் உன்மேல் கொண்ட பாசம் தெரியும்.


என் உயிர் காற்றாய் மாறவேண்டும்,

நீ போகும் இடம் எல்லாம் தொடரவேண்டும்,

உன் சுவாசத்தில் கலந்துவிடவேண்டும்.


நீ இருப்பாய் என்றும் என் கனவுலகில்,

இல்லை எனக்கு வரம் இவ்வுலகில்,

கலந்துஇருப்பாய் என் ஆன்மாவில்.

By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...