Tuesday, February 10, 2026

உன் சிதைந்த நினைவுகள்!


நூறாண்டு நீ வாழ எனது அசி,
நீ இன்றி நான் வாழ என் ராசி.
நீ இல்லாத வாழ்க்கை
என் விதியாகி விட்டது.

நான் செய்த பாவம் என்னவென்று தெரியாது.
என் காதல் உன்னை தேர்ந்தேடுத்து.
ஆனால் உனது வெறுப்பும் கோபமும்
என்னைத் தேர்ந்தெடுத்தது.

உன்னுடன் நான் இருந்த ஒவொரு நாட்கள்
கடவுளின் ஆசீர்வாதம் என்று நம்பினேன்.
நீ சென்றபின் அறிந்தேன்
அது பிசாசுகளின் பரிசு என்று.

என் வாழ்வின் அனைத்து நிறங்களை
நீ எடுத்துச் செல்லும்பொழுது.
ஒற்றை நிறம் மட்டும் விட்டுச் சென்றாய்,
கருப்பு.
இன்று நிறமின்றி என் உலகம்.

நீ ஏன் என்னிடமிருந்து உன்னை கேட்கிறாய்?
என்னிடம் இருப்பது
உன் சிதைந்த நினைவுகள் மட்டுமே.
அவை…
முழுவதும் என்னுடையவை.

By

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...