சின்னச்சிறு விதையாய் என்னுள் நுழைந்து,
இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறாய்.
பாசம் எனும் நோய் சுட்டெரிக்கும் தீயாய் பரவ,
உன்னை அன்றி எனக்கு வேறு மருந்தில்லை.
உன் சுவாசம் அழகான மாலையின் நறுமணம்,
மறக்க முடியாத அந்த நறுமணம் என் ஜீவனம்.
நீ அருகில் இருந்த நேரங்கள் பேரானந்தம்,
இன்று நீ பிரிந்ததால் என் இதயம் எரியுதம்மா,
நினைக்காமல் இருப்பது என் கட்டுப்பாட்டில் இல்லையம்மா.
நேசம் புரியாதவர்களிடம் போய்ச் சேருதே,
அதன் அறியாமை என் நெஞ்சைக் கீறுதே.
என் மகிழ்ச்சி இன்று ஊனமாய் போனதே,
வலி வானத்தை எட்டி உயிர் வதைக்குதே.
தண்ணீரைப் போன்ற உன் மென்மையான அழகு,
என் அத்தனை வலிமையையும் அழித்துவிட்டதே.
முடிவடையவில்லை என் ஆழ்ந்த மனதின் வலி,
இந்த அப்பாவி இதயம் கிடக்குது குழப்பத்தில்.
ஈரமான கண்கள்... துளிர்விட்ட கண்ணீர்,
இந்தக் காதல் நோயால் வாழ்வது கடினம்.
என் அதீத காதல் பொங்கி வரும் வெள்ளம்,
மதம் பிடித்த யானையாய் நெஞ்சில் முட்டும்!
உன் அன்பின் அருளை நீ பொழியாவிட்டாலும்,
மனம் திறந்து என்னை நீ நேசிக்காவிட்டாலும்,
இந்த வலியுடனும் துயரத்துடனும்
நான் வாழ்ந்துவிடுகிறேன்.
By

No comments:
Post a Comment