Saturday, June 20, 2026

ஓர் ஆயிரம் நாட்கள்



என்னை விட்டுப் போகாத நினைவாக நீ மாறினாய்,
உன்னைப் பிரிந்து இன்று ஆயிரம் நாட்கள் முடிந்ததே.
ஒவ்வொரு காலையும் அதே மௌனத்தோடு வருது,
காலம் என்னை மறந்துவிட்டு முன்னோக்கி நடக்குது.

ஒரு கட்டத்தில் நான் நாட்களை எண்ண மறந்தேன் ,
உன் நினைவுகள் குறையவில்லை, அது என் மனதில் அதிகமானது.
பருவ காலம் மாறுவது போல மனிதர்களும் மாறிப்போனார்கள்,
என்னிடம் எந்த ஒரு அனுமதியும் கேட்காமல்.

ஒரு காலத்தில் உன்னைத் தெரிந்தவர்களின் உதடுகளில்,
உன் பெயர்கூட இன்று மெதுவாக மறைந்துபோனது.
என்னுள் நீ மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறாய்,
பழைய நினைவுகள் அழியாமல் பிடிவாதமாய் நிற்பது போலே!

அசையாத காற்றில் பாதுகாத்து வைத்த முகம் அது,
உலகமே முடிவிற்கு வந்தாலும் மாறாத அழகு அது.
குறையவே மறுத்த அந்தத் தூரத் தடைகளையும் தாண்டி,
உன்னை மட்டுமே நான் உண்மையாக நேசித்து வாழ்கின்றேன்.

என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத சில குணங்கள் உன்னிடம் இருந்தது,
நம்பிக்கையோடு அதை நான் மாற்ற முயற்சி செய்தேன்.
இருந்தாலும் உன்னை முழுமையாகவே நான் தேர்ந்தெடுத்தேன்,
நீ என்னோடு முழுமையாகப் பொருந்தாத போதும்.

அன்று நான் எடுத்த முடிவு இன்று என்னவாக மாறியதென்று,
இப்போது பார்க்கிறேன்... என் நெஞ்சம் உடைகிறது.
நான் காதலோடு வாழவில்லை...
நான் காதலுக்குள்ளேயே வாழ்கின்றேன்.

அது எனக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இல்லாமல் போய்,
என் தோள்களின் மேல் ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டது.
நான் 'பக்தி' என்று நினைத்த என் தூய்மையான அன்பு,
இன்று மீண்டும் எனக்கே பெரிய காயம் தருது.
பிரியாத நினைவாக நீ மாறிப் போனாய்,
என் காதல் எனக்கே பாரமாய் மாறியது.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...