வாடிப் போகாமல் வாழும் நிலவே.
சிறிது காலத்தில் நீ வாடுவாய் என்றே நினைத்தேன்,
ஆனால் ஒருபோதும் வாடாமல் என் நெஞ்சில் நிலைத்தாய்.
இப்போது நீ என் வேரின் ஒரு பகுதியானாய்,
என் ஜீவனின் ஆழத்தில் உயிர் உறைந்தாய்.
வேரோடு உன்னை பிடுங்கி எறியவும் முடியவில்லையே,
வெட்டிப் பிரித்து என்னை வாழ வைக்கவும் தெரியவில்லையே.
இந்த மண்ணுலகைச் சேர்ந்தவள் நீ அல்லவே,
தேவலோக வழி தவறி வந்தவள் நீயே.
என்னை அன்பாலே வதைக்க வந்த தேவதை அவள்,
அவளது புன்னகையும் நடையும் பேரழகு தான்.
மென்மையான மாலைக் காற்று போலே வந்து,
முயற்சியே இல்லாமல் என் மனதை மயக்கினாள்.
அவளது கண்களில் மௌனமாய் பேசும் கதைகள் உண்டு,
அவளது புன்னகை என் உள்ளத்திற்கு அமைதி தருதே.
அவள் என்னை விட்டு தூரமாய் விலகிச் சென்ற பின்னும்,
மறையாத நினைவாய் அவளது சாயல் மட்டும் தங்குதே.
என் இதயத்தின் ஓரங்களில் நீண்ட நேரம் வாழுதே.
அவள் விலகிச் சென்ற பின்னும்,
அவளது சாயல் மட்டும்.
என் இதயத்தின் ஓரங்களில்,
மறையாத நினைவாய் தங்குகிறாய்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment