உன் அருகில் மட்டுமே என்னை உணருகிறேன்,
நீதானே என் வாழ்க்கையின் வசந்தகாலம்
ஆனால் எனக்கு வந்த கெட்ட நேரம்,
உன்னை விட்டுப் பிரியாமல் காலம் கைவிட்டது.
என் மனம் படும் பாடு நீ அறிவாயோ?
கோபம் கொள்ளாதே என் கண்மணியே.
பூப்போன்ற முகம் உனது பொன்மணியே,
என் சமாதானம் என்றும் நீயே.
உன் கோபம் கொண்ட கண்கள்,
அதில் சுட்டெரிக்கும் பார்வைகள் என்னைக் கொல்லுதடி,
இருந்தும் நான் ஏங்குகிறேன் உன் அன்புக்கு.
உனது கண்கள் என்ன அனுகுண்டோ?
ஒரே பார்வையில் என் மனம் சிதறிவிட்டதே.
உன் சிரிப்பு என்ன அமிலமோ?
ரசிக்க முயன்று நான் உருகிவிட்டேனே.
உனது அழகு என்ன எரிமலையோ?
கண்டதும் நான் அப்படியே கரைந்துவிட்டேனே.
உன்னை நான் வந்து சேர்வது,
இந்த ஜென்மத்தில் இங்கு இயலாதோ?
என் வலியையோ வார்த்தையால் சொல்ல முடியாது.
உன் நினைவு ஒன்றே எனக்குப் போதும்,
இப்பொழுது உன் கனவுகளே எனக்குச் சொர்க்கமடி.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment