அவள் என் அருகில் இருந்தபோது,
நான் தூங்கும் போதுதான் கனவுகள் வந்தது.
ஆனால் அவள் பிரிந்து சென்ற பிறகு,
என் கனவுகளே என் வாழ்க்கையாக மாறியது.
விழித்திருந்தாலும் அவள் முகமே,
கண் மூடியிருந்தாலும் அவள் நினைவே.
எங்கும் அவளே, எதிலும் அவளே,
நேற்றும் இன்றும் நாளையும் அவளுடனே.
என் பார்வையில் அவளே தெரிகிறாள்,
என் வார்த்தையில் அவளே நிறைகிறாள்.
என் சுவாசமும் அவள்தான், துடிப்பும் அவள்தான்,
என் கனவுகளின் சொந்தக்காரி அவள்தான்.
வாழ்க்கையில் ஒருகாலம் கனவுகள் கண்டேன்,
இன்று அவளால் கனவிலே வாழ்கிறேன்.
நிஜங்கள் எல்லாம் நிழலாய் போனதே,
நிழல்கள் எல்லாம் நிஜமாய் ஆனதே.
சில உணர்வுகளை வார்த்தைகள் சொல்லாது,
என் காதலைச் சொல்ல எந்த மொழியும் போதாது.
என் உயிரும் உடலும் எனதல்ல இன்று,
என் கனவுகள் யாவையும் தந்தேனே அன்று.
என் பார்வையில் அவளே தெரிகிறாள்,
என் வார்த்தையில் அவளே நிறைகிறாள்.
என் சுவாசமும் அவள்தான், துடிப்பும் அவள்தான்,
என் கனவுகளின் சொந்தக்காரி அவள்தான்.
அவளுக்காகவே எல்லாம்,
ஏனெனில் அவள்தான்,
என் கனவுகளின் சொந்தக்காரி
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment