அவள் போல் இந்த உலகில்
யாரும் இல்லை என்று தோன்றுகிறது.
அவள் இருக்கும் இடம் எல்லாம்
பூக்களின் நறுமணம் வீசுகின்றது.
அவள் சிரித்தாள் போதும்,
நெஞ்சுக்குள் தீப ஒளி திருவிழா.
அவள் முகம் பார்த்த பின்பு,
நிலவையும் பார்க்க பிடிக்கவில்லை.
அவள் போல் யாருமில்லை,
என் நெஞ்சில் அவளன்றி யாருமில்லை.
அவள் அருகில் இருந்தால் போதும்
எனக்குள் இசையின் பெரும் விழா.
அவள் பேச தொடங்கினாள்,
மரங்களும் பறவைகளும் கேட்கும்
“தேவதை பாடுகிறாள்” என்று
அசைவின்றி அங்கே நிற்கும்.
அவள் நடந்து வருகையில்,
சூரியனும் நிலவும் மறையும்
மேகத்தின் பின்னால் நின்று ,
அவள் ஒளியின் ஈர்ப்பைப் பார்க்கும்.
அவள் என் அருகில் இருக்கும் போது,
அவள் எனதாக மாறவில்லை.
நான் விலகி வந்த பின்பும்,
என் மனம் அவளுக்காகவே வாழுது.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment