உன்னை உற்றுப் பார்த்த பின்னே தெரிந்தது,
அந்தப் பிரம்மனின் மனது எத்தனை பெரியது.
அத்தனை அழகையும் உன்மேல் மட்டும் பொழிந்துள்ளான்,
அழகே, என்னையும் ரசிகனாக படைத்துவிட்டான்.
உனது பார்வை என்மேல் அல்ல,
என் ஆழமான உள்ளத்தின்மேல் விழுந்தது.
உன் அழகை விட உன் குணங்களை விரும்பினேன்,
உன் மழலைச் சிரிப்பினை மட்டுமே ரசித்தேன்.
உலகிற்கு நீ அழகாக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் என் கண்களுக்கு மட்டும் ஏனோ பேரழகாய்த் தெரிகிறாய்.
அனைவருக்கும் நீ ஒரு கனவாக இருக்கலாம்,
ஆனால் என் மனதிற்கு மட்டும் ஏன் நிஜமாகத் தெரிகிறாய்?
உனது கண்கள் பேசும் பொழுது,
என் மனதிற்குச் செவிகள் முளைத்துக் கொள்கிறது.
உன்னருகில் நான் நிற்கும்பொழுது,
என் இதயத்திற்குச் சிறகுகள் முளைத்து விடுகிறது.
நீயே என் உலகமாகி விட்டாய்,
என் மகிழ்ச்சிக்கான ஒரே திறவுகோல் நீதான்.
வானத்து நட்சத்திரங்கள் கூட உனக்கு ஈடாகாது,
உன்னை நேசிப்பது போல் யாரும் நேசிக்க முடியாது.
வாழ்க்கை என்னை என்றென்றும் காத்திருக்கச் சொன்னாலும்,
என் ஆன்மாவின் வாசலில் உனக்காய் காத்திருப்பேன்.
இவ்வுலகில் மட்டுமல்ல, எல்லா ஜென்மத்திலும்,
நான் உன்னுடையவனாக மட்டுமே வாழ விரும்புவேன்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment