-
சில நேரங்களில் நம் வாழ்வில்,
நம் உலகையே மாற்றும் ஒருவரைச் சந்திக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் முழு மனதோடு,
அவரை உயிராக நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம்!
ஆனால் ஒரு நாள் அவர் நம்மோடு இருக்கப்போவதில்லை,
அதுதான் யாரும் மாற்ற முடியாத உண்மை!.
அன்று அந்த உண்மை தெரியாமல் அவளோட இருந்தேன்,
அவளுடன் கழித்த ஒவ்வொரு நொடியும் இன்று வலியாய் மாறியது.
பின்னாளில் ஒரு நாள் அவளை விட்டுப் பிரிய வேண்டும் என்றால்,
முதலில் அவளை ஏன் நான் சந்திக்க வேண்டும்?
இன்னும் விடை தெரியாத ஒரு கேள்வியாக,
என் நெஞ்சுக்குள் இந்த வலி மட்டும் கேட்கிறது.
அவளை ஒரு நாள் நான் இழக்கப் போகிறேன் என்று,
முன்பே எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட…
அவளை நேசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லையே,
என் மனது அவளிடமே தங்கிவிட்டது.
இழப்போம் என்று தெரிந்தும் நேசிப்பதுதான்,
எல்லா காதலின் சாபம, இல்லை அழகோ?
என் உலகையே மாற்றிய என் அன்பே,
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை.
By

No comments:
Post a Comment