என் கனவில் வந்த ஒருத்தி,
என் கனவுகளுக்கு வைத்துச் சென்றாய் ஒரு தீ.
இழந்துவிட்டேன் என் மனதில் இருந்த அமைதி,
உன்னோடு போரிட எனக்கில்லை சக்தி.
என் வாழ்வில் நீ நுழைந்தது இயற்கையின் சதி,
காலத்தை வெல்ல என்னிடம் இல்லை மதி.
நாட்கள் கடந்தும் நஉன்னிடமிருந்து இல்லை செய்தி,
காத்திருந்து காத்திருந்து உயிர் பிரிந்தது பாதி.
வாழ்க்கை கடந்து போனது பாதி,
உனக்காகவே இன்றும் காத்திருக்கு மீதி.
என் பாசத்தில் உனக்குத் தெரியவில்லை பக்தி,
இருந்தும் உன் மனம் எனக்கு ஒரு தெய்வீக நிதி.
உன்னைக் கடந்து போகத் துடிக்குது என் வாழ்க்கை,
அதில் எனக்கு இன்னும் உள்ளது நம்பிக்கை.
நீ இல்லை எனில் வேறொருத்தி,
"நீ போடி" என்று மனதைத் தேற்ற நினைத்தேன்.
ஆனால் என் நினைவு பலிக்கவே இல்லை,
ஏனெனில் என்னுள் நீ நிரந்தரமாய் வாழ்கிறாய்.
உன் நினைவுகளைக் காயப்படுத்தக் கூட,
என் ஏழை மனம் இன்று விரும்பவில்லை.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment