ஆப்பிள் போன்ற கன்னம்,
கூர்மையான எண்ணம்,
நீ எனக்கோர் அன்பின் சின்னம்.
பால் போன்றது உந்தன் குணம்,
தேன் போன்றது உந்தன் குரல்,
உன்னை நினைத்தே என் மனம் மகிழ்கிறது தினம்.
சூரியனையும் மிஞ்சிடும் உன் ஒளி ஜொலிக்கட்டும்,
காலையில் தினமும் உன் முகம் காணக் கிடைக்கட்டும்,
என் காயங்கள் அனைத்தும் அதிலே ஆறட்டும்.
சந்தனம் போன்ற நறுமணம்,
தங்கம் போன்ற மேனி வண்ணம்,
உன் மனமோ எல்லையற்ற வானம்.
நாம் செல்லும் வாழ்க்கைப் பயணம்,
என் இதயம் உன் வாகனம்,
அதில் ஏறி என் வாழ்வை நீ ஓட்ட வேண்டும்.
நான் செல்லும் இடமெல்லாம்
நீ என் தோழமையாய் வர வேண்டும்,
அதற்காகவே தினமும் செய்கிறேன் தவம்.
என் தேவதையே; உனக்கே நான் சரணம்,
நீ இன்றி என் வாழ்க்கை பாலைவனம்,
தினமும் அனுபவிக்கிறேன் மன நரகம்.
என் காதலை கூறுகிறேன் தினமும்,
ஏனடி இன்னும் இந்த மௌனம்?
இரங்கி வா, என் மோகனம்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment