Friday, June 26, 2026

மாறாத அன்பு



எனது உள்ளத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு,
உன்னால் என் எண்ணத்தை அகதியாக்கி விரட்டிவிட்டு,
அடர்ந்த காட்டில் திக்கற்று ஒரு மரம் போல் வாழவிட்டாய்.
என் வாழ்வினைச் சிதறடித்து,
என் சந்தோஷத்தைக் கலைத்துவிட்டு,
என்னை நோக்கி வந்த பெரும் புயல் காற்று நீ.

கடவுள் மீதான பக்தி போல்,
என் பாசத்தை உன்மேல் பொழிந்தேன்,
நான் மறைந்த பின்னும் என் பாசம்,
இந்தக் காற்றில் கலந்து உன்னைத் தொடரும்.
மனம் திறந்து அழைக்கிறேன்,
உனது அன்பிற்கு ஏங்குகிறேன்,
உன் அருளை நாடுகிறேன்,
உன் மகிமையால் வாழ்கிறேன்.

உந்தன் ஞாபகங்கள் எனக்கு
நரக வேதனையைக் கொடுக்கிறது,
உன்னால் எனக்கிங்கு ஏதும் இல்லை சுகம்.
கடந்து போகும் காலம் என்றுதான் நானும் இருந்தேன்,
ஆனால் என் சோகத்தில் நேரம்
முன்னோக்கிச் செல்லத் தயங்குகிறது.

என் சிந்தனைகள் ஊமையானது,
என் சந்தோஷங்கள் காணாமல் போனது,
என் கனவுகள் கலைந்து போனது,
என் சிரிப்பும் கசப்பானது.

இரவுகள் பகலாய் மாறும், பகல் இரவாய் மாறும்,
காலங்களும் கோலங்களும் மாறும்.
எது எப்படி மாறினாலும், உன்மேல் கொண்ட என் பாசம்,
இன்றும் என்றும் எந்நாளும் மாறாது.

By
Sanjii-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...