என் ஊரிலே... நீ திருவிழா...
உன் ஒளியிலே... என் இரவுகளோ?
உன் மடியிலே... என் கனவுகளோ?
என் வானிலே... நீ வெண்ணிலா...
நாம் சேரும் நாளோ ஒரு பெரும் விழா,
அதுவே தினமும் நான் காணும் கனா!
உன்னுடன் தானே இந்த வாழ்வின் உலா,
என் எல்லா உறவும் முடிவது உன்னிலா?
உன் கண்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்,
என் ஏழை மனதிற்குப் புரிகின்றதே...
என் மனம் பேசும் மௌனங்கள் யாவும்,
உன் மெல்லிய செவிகளுக்குக் கேட்கின்றதா?
நாமிருவர் உலாப் போகும் தருணங்களிலே,
இணைந்தே செல்வோம் நம் கரங்களிலே!
நம் உறவு தொடர்ந்தால் அதுவே மகிழ்ச்சி,
அதற்கு இந்த இயற்கையே சாட்சி!
என் மனம் என்றும் ஒரு கடல் போன்றது,
அலை மோதும் காதல் மிக ஆழமானது!
என் மனம் என்றும் ஓர் ஆகாயம் போன்றது,
அங்கு வாழும் பாசம் அளவே இல்லாதது!
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment