அவள் விழிகள் பேசும் மொழி,
என் நெஞ்சை சுகமாக்குதே.
அவளின் மென்மையான ஸ்பரிசம்,
என் மனதுக்கு இனிய கிருக்கேற்றுதே.
அவள் அரு சிரிப்பில்,
நான் முழுவதும் அவள் வசமானேன்.
அவளுடன் கழிந்த ஒவ்வோர் நாளும்,
மலர்ந்த வசந்த காலமானது.
அவளின் ஒரு பார்வை போதுமே,
என் உயிர் என்னை விட்டு பறந்திடும்.
அவள் இதயத்தின் துடிப்பு,
மெல்லிய இசையாய் ஒலிக்கிறது.
அதை நான் கேட்கும் ஒவ்வொரு நொடியும்,
என் உயிர் நடனமாடுகிறது.
அவள் கருவிழியில்,
நான் மறுமுறை பிறந்தேன்.
எனக்கே தெரியாமல்,
அவளுக்கான காதல்
என் இதயத்தில் பிறந்துவிட்டது.
அவள் கண்கள் காட்டிய காதல்,
என்னை முழுவதுமாய் மாற்றிவிட்டது.
அவள் அருகில் வாழ்வது,
எனக்குக் கிடைக்காத ஒரு வரமாகிவிட்டது.
அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும்,
என் மனதில் பூக்கும் மலராகிறது.
அவள் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்,
என் வாழ்வில் விடியலாகிறது.
அவள் கைகள் தொட்ட அந்த கணம்,
காலமே நின்றது போலிருந்தது.
அவள் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்,
என் இதயம் புதிதாய் துடிக்கிறது.
அவள் அருகில் இருந்தால்,
உலகமே அழகாய் தெரிகிறது.
அவள் தூரம் சென்றாலும்,
அவள் நினைவு மட்டும்
என் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை.
காதல் என்றால் என்னவென்று
எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அவள்.
வாழ்க்கை என்றால் அவள்தான் என்று
என் மனம் தினமும் சொல்லுகிறது.
அவள் என் கனவின் இனிய பொருள்.
அவள் இல்லாத நாட்களிலும்,
அவள் நினைவே
என் உயிரின் அழியாத துணை.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment