Sunday, July 26, 2026

அவளிடமே தங்கிய என் இதயம்




அவள் சென்றபின் ஒவ்வொரு நாளும்,
என் நாட்கள் ஒரு குறையுடன் கழிகின்றன.
அவளின் உதடுகளில் புன்னகை காணும்பொழுது,
என் உள்ளம் ஏதோ ஒரு வெறுமையுடன் இருக்கின்றன.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் கழிந்தன,
காலம் மாறிவிட்டன, பருவங்கள், பாதைகள்,
நான் அறிந்த மனிதர்கள் அனைத்தும் மாறிவிட்டன…
ஆனாலும் ஒன்று மட்டும் மாறவே இல்லை,,
அவளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவளின் அதிகாலை குரல் கேட்ட தருணங்கள்,
ஆவலுடன் உரையாடி கழித்த நாட்கள்,
எங்கே போயின?
மலையை பார்த்தபடி,
நான் நின்று ஒவ்வொரு மழைத்துளிகளிலும்
அவள் முகத்தை காண ஏங்குகிறேன்.

எனது வலி விசித்திரமானது
பல ஆண்டுகள் கடந்தாலும்,
அவளிடம் தங்கிவிட்ட என் இதயம்
இன்னும் திரும்பி வரவில்லை.
கால போக்கில் காயங்கள் ஆறும் என்பார்கள்,
ஆனால் அவளின் வலி மற்றும் இன்னும் ஆறவில்லை.

அவளின் பங்கு என் கதையில் முடிந்துவிட்டது,
ஆனால், என் இதயம் நான் சொல்வதை
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அவளை எதனை முறை இழந்தாலும்,
அவளை விட்டு முழுமையாக விலகி செல்ல முடியவில்லை.
அவள் பெயரை கூட என் நினைவிருந்து அழிக்க முடியவில்லை
என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து,
அவளின் அத்தியாயத்தை என்னால் நீக்க முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் அவள் பெயர் கேட்கும்போது,
எனோ என் இதயம் துடிக்கிறது,
பழைய காயங்கள் இன்னும் புதிதாய் வலிக்கிறது.
பழைய புத்தகங்களுக்குள் காய்ந்த இலைகளையும் பூக்களையும் பத்திரப்படுத்தி வைப்பதைப் போலவே,
நான் அவளுடைய நினைவுகளை வைத்திருக்கிறேன்.

பல ஆண்டுகளாக
புதிய பாதைகளில் பயணித்திருக்கிறேன்,
புதிய கனவுகளை கண்டிருக்கிறேன்,
பல ஆயிரம் முகங்களை பார்த்திருக்கிறேன்,
அவை அனைத்தும் அவளிடமே வந்து சேருகின்றன,
ஏனெனில், அவளின் சிந்தனைகள்
என் ஆழ்மனதில் நிறைந்துள்ளன.

சில உறவுகள் முடிந்தாலும்,
அவை இதயத்திலிருந்து முழுமையாக மறைவதில்லை.
சில மனிதர்கள் வெகுதூரம் விலகி சென்றாலும்,
அவர்களின் நினைவுகள் நம்மை விட்டு நீங்குவதில்லை.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...