அவள் என் அருகில் இல்லாமலே
நான் அவளை நேசிக்கிறேன்.
என் காதலை நான்
என்றும் அவளுக்குச் சொல்லவில்லை.
அவள் என்னை மறந்தாலும்
நான் காத்திருப்பேன்.
அவள் என்னை வெறுத்தாலும்,
நான் காதலிப்பேன்.
நான் உறங்கும் வேளையில்
அவள் தேவதையாய்த் தெரிகிறாள்.
கண்விழித்தபின்
அவள் என் நினைவிலேயே நிற்கின்றாள்.
என் மனதில் குடிகொண்டிருக்கிறாள்,
கனவிலே என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
காலங்களை மறந்துவிட்டேன்,
கண்விழிக்க ஆசை இல்லை.
என்னை ஏற்றுக்கொள்வாளென
நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.
அவள் வார்த்தைகளைக் கேட்க
ஆவலாய்க் காத்திருக்கிறேன்.
அவளுடன் இருந்த நாட்கள்
ஒரு பசுமை நிறைந்த காலம்.
அவளின் அழகு எனக்கு ஒரு பொக்கிஷம்.
அதை என்றும் என் விழியில் வைத்திருப்பேன் .
அவள் முகமோ பூவின் வடிவம்
ஆனால் என்னைக் கண்டதும் ஏன் தீயின் உருவம்?
என்மேல் கொண்ட அவளின் வெறுப்பு,
என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பு.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment