Wednesday, July 22, 2026

கனவுகளில் நிஜமாய் அவளுடன் வாழ்கிறேன்



அன்று, தினம் தினம் ,
அவளைக் காண்பதில் நான் மகிழ்ந்தேன்.
இன்றோ, நாள்தோறும் என் கனவுகளில்,
அவள் இருப்பை நான் ரசிக்கிறேன் .

விடியும் வரை அவளை அணைத்துக்கொள்ள
என் இரவுகள் ஏங்குகின்றன.
அவள் தலை என் தோல் மேல் சாயனும்,
என் உயிருடன் அவளை கலந்துவிடனும்..
நம் இரு இதயத் துடிப்புகளும்
ஒரே இசையாக ஒலிக்கட்டும்.

என் இதயம் அவள் பெயரைப் பாடுகிறது,
என் கண்கள் அவளையே தேடுகின்றன.
என்னை முழுமையாக வென்றவள் அவள்,
என் இதயத்தை கொஞ்சம் கஞ்சமாய் திருடுகிறாள்.

அவள் புன்னகைக்கும் ஒவ்வொரு கணமும்,
என் கவலைகள் அனைத்தும் கரைந்து போகின்றன.
அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்,
என் வாழ்க்கை புதிதாக மலர்கிறது.

அவள் அன்பின் சிறையில்
என்றென்றும் கைதியாகவே இருப்பேன்.
அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டும்;
அவள் அன்பே என் உண்மையான சுதந்திரம்.

கனவுகளை நான் நிஜமாக்கினேன்,
நினைவுகளுடன் வாழக் கற்றுக்கொண்டேன்.
அவள் அருகில் இல்லாத நேரங்களிலும்,
அவள் நினைவுகளுடன் நான் வாழ்கிறேன்.

அவளுக்குள் என்னைத் தேடினேன்,
அதைக் காண முடியாமல் தவித்தேன்.
அந்தத் தேடலில் என்னை இளந்தேன்.
அவள் அன்பு என்னை முழுமையாக ஆட்கொண்டது.

நான் ஒரு பைத்தியக்காரனைப் போலானேன்,
சுற்றியுள்ள உலகையே மறந்துவிட்டேன்.
அவளுக்கான என் முடிவில்லாத் தேடலில்,
இறுதியில் என்னன்பை தொலைத்தேன்.

அவள் கேட்டிருந்தால் என் உயிரையே கொடுத்திருப்பேன்;
அவள் புன்னகைக்காக உலகையே துறந்திருப்பேன்.
அவள் மகிழ்ச்சியே என் ஆழ்ந்த விருப்பம்,
அவள் மன அமைதியே என் வாழ்வு.

இன்று அவள் என் அருகில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் அவள் என்றென்றும் வாழ்கிறாள்.
ஒவ்வொரு இரவும் நான் கண்களை மூடும்போது,
என்னை அணைக்க அவள் கனவில் வருகிறாள். நிஜம்
அவளிடமிருந்து என்னைப் பிரித்தாலும்,
நினைவுகள் என்னை விடுவிப்பதில்லை.
இந்த உயிர் இருக்கும் வரை,
என் அன்பு ஒருபோதும் மங்காது.

ஒரு காலத்தில், நிஜத்தில் அவளை நேசித்தேன்;
இப்போதோ, கனவுகளில் அவளுடன் வாழ்கிறேன்.
நாளை எந்த உலகம் காத்திருந்தாலும்,
என் இதயம் அவள் பெயரை மட்டுமே பாடும்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...