மெதுவாய் மெதுவாய்,
எந்த வித சத்தம் இல்லாமல்,
அவள் என் இதயத்துக்குள் குடிகொண்டாள்,
பிறகு அதை சொந்தமாக்கிக்கொண்டாள்.
மரவேர்களைப் போல,
அவள் எனக்குள் வளர்ந்து பரவினாள்,
என் உடல் முழுவதும்.
என் நரம்புகளில் இரத்தமாக,
என் மார்பில் இதயத்துடிப்பாக,
என் மனதில் நினைவுகளாக,
மற்றும் ஒவ்வொரு உயிரணுவாக வாழ்கிறாள்.
அவள் கூந்தல் காட்டுக்குள் துளைத்து போனேன்,
அந்த இருட்டினில் அவளின் கண்களில்
நட்சத்திர ஒளி இருந்தன.
நிலவின் பொலிவுடன் அவளின் முகத்தை நான் ரசிக்கயில்,
ஆனந்தம் கொண்டாட்டமே என்னுள்.
அவளது பூப்போன்ற இதழ்களிலிருந்து
வரும் ஒவ்வொரு வார்த்தைகளும்
இசையாய் கேட்கின்றன.
தலையில் சூடி இருக்கும் பூக்கள்,
நெற்றி பொட்டு கூட நடனம் ஆடுகின்றன,
காதணி, வலையோசை, கால் சங்கிலி,
அனைத்தும் அவையின் இசைக்கு பாடுகின்றன.
வேகமாக வேகமாக
மிக பெரிய சத்தத்துடன்
அவள் என் வாழ்க்கையிலிருந்து விலகி
தன் நினைவுகளை என்னிடம் விட்டுச் சென்றாள்.
வீசும் புயல் காற்றை போல்,
என்னிடமிருந்து அவள் அவளை
பரித்து சென்றாள்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment